×

சித்தையன்கோட்டையில் மாட்டுத்தொழுவமான குடிநீர் வால்வு தொட்டி

சின்னாளபட்டி : சித்தையன்கோட்டை சேடபட்டியில் குடிநீர் வால்வு தொட்டிகள் மாட்டுத்தொழுவம், கழிப்பறை தொட்டியாக மாறிய வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சேடபட்டி மேல்நிலை தண்ணீர் தொட்டி அருகே கழிப்பறை உள்ளது. இது பூட்டியே கிடப்பதால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறையை சுற்றியும், சாலை ஓரங்களையும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் கழிப்பறைக்கு சென்றுவிட்டு கைகால்களை சுத்தம் செய்வதற்கு குடிநீர் வால்வு தொட்டியில் தேங்கியிருக்கும் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இந்த குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் போது தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக இதே நிலைமை நீடித்தும் பேரூராட்சி நிர்வாகம் வால்வு தொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் செய்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா கூறுகையில், பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் புகார் செய்தும் குடிநீர் வால்வு தொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கைம் எடுக்கவில்லை. பகல் நேரங்களில் ஆடு, மாடுகள் குடிக்கும் தண்ணீர் தொட்டியாகவும், கழிப்பறைக்கு சென்றுவிட்டு வரும் ஆண்கள் கைகால்களை சுத்தம் செய்யும் இடமாகும் இந்த வால்வு தொட்டி மாறிவருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு காலரா, வயிற்று போக்கு, காய்ச்சல் உட்பட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. பேருராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து குடிதண்ணீர் வால்வுகளை சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கை விடுத்தார். …

The post சித்தையன்கோட்டையில் மாட்டுத்தொழுவமான குடிநீர் வால்வு தொட்டி appeared first on Dinakaran.

Tags : Siddayangote ,Chinnanapatti ,Sittiyankotta Sedapatti ,Siddanakkotte ,Dinakaran ,
× RELATED சின்னாளபட்டி அருகே அறுவடைக்கு தயாரான சின்ன வெங்காயம்